யோக மார்க்கத்தில் இருப்பது என்று நான் எதைச் சொல்லுகிறேனென்றால் தெய்வத்துடன் ஒன்றியிருப்பதொன்றே அர்த்தமுள்ள வாழ்கையாகும் என்கிற உணர்வில் இருப்பதுதான்.
நமது ஆர்வத்தின் குறிக்கோளெல்லாம் இந்த ஒன்றே ஒன்றுதான்.
தெய்வத்துடன் ஒன்றியிருக்கும் வாழ்க்கை ஒன்று தான் வாழத் தகுந்தது.
மற்ற எந்த விசயத்திற்கும் ஒரு மதிப்பும் இல்லை; தியாகம் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை.
எந்த ஆசையுமே இல்லாத போது எதைத் தியாகம் செய்வது?
தெய்வத்துடன் ஒன்றியிருப்பது வாழ்வின் குறிக்கோளாக இல்லாத பட்சத்தில் ஒருவன் இன்னும் யோக மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.
ஸ்ரீ அன்னை.