Saturday, November 4, 2017

யோக மார்க்கம்

யோக மார்க்கத்தில் இருப்பது என்று நான் எதைச் சொல்லுகிறேனென்றால் தெய்வத்துடன் ஒன்றியிருப்பதொன்றே அர்த்தமுள்ள வாழ்கையாகும் என்கிற உணர்வில் இருப்பதுதான்.


நமது ஆர்வத்தின் குறிக்கோளெல்லாம் இந்த ஒன்றே ஒன்றுதான்.
தெய்வத்துடன் ஒன்றியிருக்கும் வாழ்க்கை ஒன்று தான் வாழத் தகுந்தது.
மற்ற எந்த விசயத்திற்கும் ஒரு மதிப்பும் இல்லை; தியாகம் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை.
எந்த ஆசையுமே இல்லாத போது எதைத் தியாகம் செய்வது?
தெய்வத்துடன் ஒன்றியிருப்பது வாழ்வின் குறிக்கோளாக இல்லாத பட்சத்தில் ஒருவன் இன்னும் யோக மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.
ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அன்னை

அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும்; இதயத்தில் அவளை உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப் பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும்; வனப்பும், வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவதுபோல்அவளிடமிருந்து பெருகி வருகின்றன.
அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம், புன்னகை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு, அளவில்லா ஆனந்தத்தின் ஆழங்களில் அமிழ்தப்படுகிறது.
அவள் கரங்களின் ஸ்பரிசம் காந்தம் போன்றது.
அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது.
அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.
 ஸ்ரீ அரவிந்தர்.
நன்றி: அகில இந்திய இதழ், நவம்பர் 2015, ப. 35.

ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.

ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.
அருள் எப்பொழுதும் செயல்படக் காத்‌திருக்கிறது .
ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
அதன் செயலை எதிர்க்கக்கூடாது .
தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான்.
உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.
உன்னுடைய அழைப்பு உண்மையானதாக இருந்தால், அதாவது நீ உண்மையாகவே குணமடைய விரும்பினால், உன்னுடைய அழைப்பிற்கு பதில் கிடைக்கும்.
அருள் உன்னைக் குணப்படுத்தும்.
.
ஸ்ரீ அன்னை.

Thursday, November 2, 2017



Faith is Miracle


People do not know how important is faith, how faith is miracle, creator of miracles. 
If you expect at every moment to be lifted up and pulled towards the Divine, He will come to lift you and He will be there, quite close, closer, ever closer.
The Mother.

Never grumble.




Never grumble. 


All sorts of forces enter you when you grumble and they pull you down. 
Keep smiling. 
I seem always to be joking but it is not mere joking. 
It is a confidence born from the psychic. 
A smile expresses the faith that nothing can stand against the Divine and that
everything will come out all right in the end.
The Mother.

The Divine is with You.




Do not give too much importance to the little incidents of life.

Do not give too much importance to the little incidents of life.

The importance of these incidents lies in the extent to which they have served you to make progress.

And once the progress has been made, the consequences of past errors, if there are any, disappear through the intervention of the divine Grace.


The Mother, in Rays of Light.

பிரார்த்தனைகள் பலன் அளிக்குமா

பிரார்த்தனைகள் பலன் அளிக்குமா என்ற ஐயம் பலருக்கு உண்டு.
பலன் மட்டுமல்ல; பிரார்த்தனைகளே அவசியம் தானா என்றும், அச்செயல் பகுத்தறிவுக்குப் பொருந்தாது என்றும் பலர் நினைக்கிறார்கள்.


அகங்கார இச்சையுடன் கடவுளை மன்றாடியும், காணிக்கை செலுத்தியும் அவரை திசை திருப்பி விட முடியாது என்பது உண்மைதான்.
தெய்வத்திற்கு ஒரு சங்கல்பம் உள்ளது.
ஓர் உள்நோக்கம் உள்ளது.
அதற்கேற்பதான் அது செயலாற்றும்.
அனைத்தும் கடந்த கடவுள் அனைத்துமையுமே அறிவாராகையால் அவரது பேரறிவுக்கு அளவற்ற தொலை நோக்கு உண்டு.
எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
யாரும் அவருக்கு வழி காட்டவோ, தூண்டி விடவோ தேவை இல்லை.
ஸ்ரீ அரவிந்தர்.
அகில இந்திய இதழ், ஆகஸ்ட் 2009, ப. 9.

சரணாகதி

உனக்காகச் சரணத்தையும் தெய்வ சக்தியே செய்யும் என்ற தவறான, சோம்பேறித்தனமான எண்ணத்தையும் ஒழி.
நீ அவளிடம் சரணடைய வேண்டும் என்று பரமன் கோருகிறான், ஆனால் உன்னைச் கட்டாயப்படுத்தவில்லை.


இறுதித் திருவுருமாற்றம் ஏற்படும் வரை எந்தக் கணமும் நீ இறைவனை மறுத்து விலக்கவோ, அல்லது உனது சமர்ப்பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவோ உனக்குச் சுதந்திரம் உண்டு.
ஆனால் அதன் ஆன்மிக விளைவுகளை நீ அனுபவிக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
உனது சரணம் நீயே சுதந்திரமாகச் செய்ததாய் இருக்க வேண்டும்.
அது ஓர் உயிருள்ள ஜீவனின் சரணமாக இருக்கவேண்டும்.
உயிரற்ற ஓர் இயந்திரத்தின் அல்லது கருவியின் இயக்கமாக இருக்கக் கூடாது.
ஸ்ரீ அரவிந்தர்.

அருள்

உனக்கு நம்பிக்கையும், அசையாத உறுதியும் இருக்கட்டும்.
மற்றெல்லாவற்றையும் இறைவனின் அருள் செய்யும்.



நாம் நமது விருப்பங்களை இறைவனின் அருளுக்கு அர்ப்பணிப்போம்.
அருளே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறது.
அருள், அருள் ஒன்றே செயல்பட முடியும்.
அதனால் மட்டுமே பாதை உண்டு பண்ண முடியும்.
அதனால் மட்டுமே அந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும்.
அருளில் நம்பிக்கை வை.
அவளே அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறவள்.
ஸ்ரீ அன்னை.

யோக மார்க்கம்

யோக மார்க்கத்தில் இருப்பது என்று நான் எதைச் சொல்லுகிறேனென்றால் தெய்வத்துடன் ஒன்றியிருப்பதொன்றே அர்த்தமுள்ள வாழ்கையாகும் என்கிற உணர்வில் இருப்பதுதான்.



நமது ஆர்வத்தின் குறிக்கோளெல்லாம் இந்த ஒன்றே ஒன்றுதான்.
தெய்வத்துடன் ஒன்றியிருக்கும் வாழ்க்கை ஒன்று தான் வாழத் தகுந்தது.
மற்ற எந்த விசயத்திற்கும் ஒரு மதிப்பும் இல்லை; தியாகம் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை.
எந்த ஆசையுமே இல்லாத போது எதைத் தியாகம் செய்வது?
தெய்வத்துடன் ஒன்றியிருப்பது வாழ்வின் குறிக்கோளாக இல்லாத பட்சத்தில் ஒருவன் இன்னும் யோக மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.
ஸ்ரீ அன்னை.

Wednesday, November 1, 2017

Savitri Recitation

Prosperity Day November 1, 2017
7.00 p.m.

Om Namo Bhagavate Sri Aravindaya

Recitation of Savitri
Book III - The Book of the Divine Mother
Canto IV - The Vision and the Boon
Pages 334 - 348

WhatsApp Group on Maa Sri Aurobindo Members

1 Mrs Lalitha Ravi
2 Mrs Subhasree Viswanathan
3 Mr Srinivasan
4 Mrs Pavithra Dayanidhi
5 Mrs Susi
6 Mrs Aarthi Raj
7 Mr Ravishankar
8 Mrs Lakshmiraghavan Jayanthi
9 Mr Pranay Sir
10 Mr Joy Krishnakumar
11 Mrs Divya
12 Mrs Chitra Vm
13 Mrs Selvi Shan
14 Mrs Kavitha S Menon
15 Dr Arangaswamy Ganesh
16 Mrs Akilapriya Vaitheeswaran
17 Mrs Sangeeta Kapoor
18 Dr P S PS Vijayalakshmi