Wednesday, November 1, 2017

பிரார்த்தனை


பிரார்த்தனைக்கு ஓர் உண்மையான வலிவும், உட்பொருளும் இருக்கிறது.

மனிதனின் நம்பிக்கையையும், சங்கற்பத்தையும் தெய்வ சங்கற்பத்துடன் பொருத்தி தெய்வத்துடன் ஒரு தொடர்பு கொள்வதற்கு இந்தப் பிரார்த்தனையின் சக்தி உதவுகிறது.

இந்த ஆர்வத்தையும், சங்கற்பத்தையும் நமது சொந்த பலத்தினாலும், தீவிர உழைப்பினாலும் பயனுற இயக்க முடியும்;

நமது நோக்கம் சாதாரணமாக இருந்தாலும் சரி, இந்த ஆர்வமும் உழைப்பும் பலம் மிக்கது தான்.

நமது சொந்த முயற்சி இன்றி கடவுளை முழுதும் சார்ந்திருப்பதாலும் இந்தப் பயனை நாம் அடையலாம்.

எப்படியும் கடவுளின் இந்த அருள் நமது ஆர்வத்தின் பயனாக விளைந்ததே.

இது ஒரு வகையான ஈர்ப்பு தத்துவத்தால் நிகழ்வதாகவும் இருக்கலாம். அல்லது முழு உணர்வுடன் ஜீவன் தெய்வத்தை நோக்கி ஆர்வமுற, தெய்வம் அதற்கு மாற்றாக வழங்கும் சகாயமாக, துணையாக, உதவியாகவும் ஆகலாம்.

மனிதன் கோரிய பாதுகாப்பை கடவுள் இவ்வாறு வழங்குவார்.

ஸ்ரீ அரவிந்தர்.

அகில இந்திய இதழ், ஆகஸ்ட் 2009, ப. 9.

No comments:

Post a Comment